''திராவிட மாடல் அனைத்து மாநிலங்களுக்கான ஆட்சி நிர்வாக ஃபார்முலா..'' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகளை, மக்களின் இதயங்களில் பதித்திடுவோம் என்றத் தலைப்பில் கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாக இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
திமுக மீது சமூக வலைத்தளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகள் மூலம் அவதூறு பரப்புவோருக்கு தாங்களும் காணொளி வாயிலாகப் பதில் தரப் போவதாக மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Comments