பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆண் நண்பரும் அவரது மனைவியும் கைது..!

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆண் நண்பரையும் அவரது மனைவியையும் கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சுஜய் என்பவரது வீட்டில், கடந்த செவ்வாய்க்கிழமை சுப்புலட்சுமி என்ற கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
சுஜய் திருமணம் செய்துக் கொள்வதற்கு முன்பு மாணவி சுப்புலட்சுமியுடன் 6 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான பிரச்சனையில் சுஜய், சுப்புலட்சுமியை தனது வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்திருப்பதும், அதற்கு உடந்தையாக அவரது மனைவி ரேஷ்மா இருந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரளாவில் தனது மாமியார் வீட்டில் பதுங்கியிருந்த சுஜய், அவரது மனைவி ரேஷ்மா இருவரையும் கைது செய்துள்ள தனிப்படை போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments