ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 5,000 கிலோ மாம்பழம் குழி தோண்டி புதைத்து அழிப்பு..!

0 1381

திருச்சியில் ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் கிலோ மாம்பழத்தை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

அம்மா மண்டபம் பகுதியில் 5 மாம்பழ குடோன்களில் நடத்திய ஆய்வின் போது ரசாயன பயன்பாடு கண்டறியப்பட்டது. அந்த பழங்கள் அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் குழி தோண்டி புதைக்கப்பட்டன.

தென்காசி மாவட்டம் வானூரில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறையினர் ரசாயனம் பயன்படுத்திய சுமார் 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி நகரில் வாழைத்தார் மற்றும் மாம்பழ மண்டிகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கிருந்த ரசாயனப் பொடிகளை பறிமுதல் செய்து, விதிகளை மீறியதாக 3 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments