''கர்நாடகாவை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவதே பாஜகவின் நோக்கம்'' - பிரதமர் மோடி

உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியையும், ஜனநாயகத்தையும் மதிக்கும் நிலையில், உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து, இந்தியா குறித்து காங்கிரஸ் அவதூறு பரப்புவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடகா சென்றுள்ள பிரதமர், முல்கி, மட்பித்ரி உள்ளிட்ட இடங்களில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார்.
அதில் உரையாற்றிய அவர், பாஜக ஆட்சியின் கீழ் உலகிலேயே 5வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா முன்னேறியுள்ளதாகவும், கர்நாடகாவை வளர்ச்சியடைந்த மாநிலமாகவும், உற்பத்தி மையமாகவும் மாற்றுவதே கட்சியின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
கர்நாடாகவின் வளர்சிக்கும், அமைதிக்கும் எதிராக காங்கிரஸ் செயல்படுவதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.
Comments