30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒன்று கூடி பழைய நினைவுகளை பகிர்ந்து உற்சாகமடைந்த முன்னாள் மாணவர்கள்..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசுப் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
1992 - 1994ஆம் கல்வியாண்டில் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பல மாதங்களாக முயற்சி செய்து சென்னை, பெங்களூரூ, கோவை, மதுரை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசித்து வரும் நண்பர்களின் செல்போன் எண்களை திரட்டி இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்.
அதன்படி 45 மாணவர்கள் பள்ளில் சந்தித்து, தங்களத் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் பள்ளிக்கு 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பல்வேறு உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கினர்.
Comments