திவாலாகும் நிலையில் அமெரிக்காவின் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி... 11 நிறுவனங்கள் 30 பில்லியன் டாலர் கடன் வழங்கியும் மீட்க முடியவில்லை..!

0 2424

திவாலாகும் நிலையில் உள்ள ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை கையகப்படுத்த அமெரிக்க அரசின் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் அந்த வங்கியின் பங்குகள் கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.

வெள்ளிக்கிழமையன்று 40% சரிந்ததன் மூலம், இந்தாண்டில் இதுவரை 97% சரிவடைந்து இருப்பதாக தெரிகிறது.

இந்த வங்கியை மீட்க 11 மிகப்பெரிய கடன் நிறுவனங்கள் 30 பில்லியன் டாலர்களை வழங்கின. எனினும் வங்கி திவாலாவதை தவிர்க்க இயலவில்லை.

இதே போன்ற பொருளதார நெருக்கடியில் சிக்கிய சிலிக்கான் வேலி வங்கியை அண்மையில் ஜோ பைடன் அரசு கையகப்படுத்தியது.

இதனால் மற்றொரு வங்கியை உடனடியாக கையகப்படுத்த வேண்டாம் என்று அரசு தயங்கி வந்தது. எனினும் வேறு வழி இல்லாததால் ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி விரைவில் கையகப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments