சென்னை விமான நிலைய கார் பார்க்கிங் 4வது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

0 3578

சென்னை விமான நிலையத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க வந்த பெண் ஒருவர், கார் பார்க்கிங்கின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

சென்னையை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது கணவர் பாலாஜி அமெரிக்காவில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வரும் நிலையில், ஐஸ்வர்யா குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார்.  கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு விமான நிலையத்தில் உள்ள திரையரங்கில் குழந்தைகளுடன் படம் பார்க்க சென்ற ஐஸ்வர்யா, படம் ஓடிக் கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்றுவருவதாக பிள்ளைகளிடம் கூறிவிட்டு, அங்குள்ள பன்னடுக்கு கார் பார்க்கிங்கின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

மன அழுத்தத்தால் ஐஸ்வர்யா தற்கொலை செய்துக் கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், அவரது உறவினர்களை அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments