"கர்நாடகாவில் காங். ஆட்சியமைத்தால் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்" - ராகுல் காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கர்நாடகதேர்தலையொட்டி அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றாது என்று மோடி கூறியதை சுட்டிக்காட்டியதுடன் ஓராண்டில் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அளித்த எந்தவொரு வாக்குறுதிகளையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை என குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் ஆட்சிக்குவந்த முதல் நாளில் ஏற்கனவே அளிக்கப்பட்ட நான்கு வாக்குறுதிகளுடன் 5வது வாக்குறுதியாக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
Comments