தெலுங்கானாவில் பட்டப்பகலில் லாரி ஓட்டுநரை கல்லால் அடித்துக் கொன்ற பயங்கரம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

0 1359

தெலங்கானாவில், பட்டப்பகலில் லாரி ஓட்டுநர் கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தாரம் கிராமத்தை சேர்ந்த கனகய்யா - பத்மா தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது மூத்த மகளும், அதே ஊரை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞரும் 5 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

பின்னர் கருத்துவேறுபா டு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், தன்னை காதலிக்கும்படி மகேஷ் தொடர்ந்து துன்புறுத்திவந்துள்ளார். இதற்கிடையில், அந்த இளம்பெண்ணுக்கு வேறொரு இளைஞருடன் திருமணமான பிறகும், திருமணத்திற்கு முன்பு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை அப்பெண்ணின் கணவருக்கு மகேஷ் அனுப்பியுள்ளார்.

இதனால் மனமுடைந்த இளம்பெண்ணின் கணவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், மகள் விதவையானதற்கு காரணமான மகேஷை கொலைசெய்து பழிதீர்த்துக் கொள்ள முடிவெடுத்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், பைக்கில் சென்று கொண்டிருந்த மகேஷை வழிமறித்து கீழே தள்ளிவிட்டு பாறாங்கல்லை தலையில் தூக்கிபோட்டு கொலை செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments