கேரளாவில் வந்தே பாரத் ரயில்: பிரதமர் தொடங்கி வைத்தார்

0 1081

கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் துவக்க விழாவில் பேசிய அவர், மாநிலங்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சிக்கான மூலம் என்றார்.

இந்தியாவின் ரயில் நெட்வொர்க் வேகமாக மாறுதல் அடைந்து வருவதாகவும், அதிவேக ரயில்களுக்குத் தயாராகி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். முன்னதாக திருவனந்தபுரம் - காசர்கோடு இடையேயான கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, காரின் கதவை திறந்து, நின்றுகொண்டு வந்த பிரதமருக்கு, சாலையில் இருமருங்கிலும் திரண்டிருந்த ஆயிரக் கணக்கானோர் மலர்த் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments