தனியார் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி இளம்பெண் பலி..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
புல்ல கவுண்டன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை, உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்து வருகிறது.
சுமார் 60 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்ற நிலையில், மதிய உணவு இடைவேளையின் போது வேதிப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில், அதிக வெப்பம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், 2 அறைகள் தரைமட்டமாகின. வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 வாகனங்கள் தீக்கிரையாகின.
சாத்தூர், ஏழாயிரம் பண்ணையில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். உயிரிழந்த இளம்பெண் ஜெயசித்ரா குடும்பத்துக்கு, முதலமைச்சர் 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை
Comments