சொந்த நாட்டிலேயே குண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்.. ரஷ்யர்கள் 3 பேர் படுகாயம்..!

சொந்த நாட்டிலேயே ரஷ்ய போர் விமானம் குண்டு வீசியதில் பொதுமக்கள் மூவர் படுகாயமடைந்தனர்.
உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள பெல்கரோட் நகரில் ரஷ்யாவின் சுகாய் 32 ரக போர் விமானம் தவறுதலாக குண்டுவீசியது.
சாலையில் விழுந்த குண்டு, பயங்கர சத்தத்துடன்வெடித்து சிதறியது. இதில் படுகாயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பில் 4 கார்கள் முற்றிலும் சேதமடைந்தன. குண்டுவெடிப்பு நேரிட்டதும் அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
தவறை ஒப்புக்கொண்ட ரஷ்ய ராணுவம், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. அதேவேளை, எந்த வகையிலான குண்டு வீசப்பட்டது என்ற தகவலை ரஷ்ய ராணுவம் வெளிப்படுத்தவில்லை.
Comments