அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.எட் செமஸ்டர் தேர்வில் ஒரே மேஜையில் 4 மாணவர்கள் எழுதியதால் சர்ச்சை...!

0 12677

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற பி.எட் (B.Ed) தேர்வில் ஒரே பென்ஜில் 4 மாணவ மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுத வைக்கப்பட்டனர்.

ஆ.கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 7 கல்வியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதினர்.

ஒரு பென்ஜில் 2 பேர் அமர வேண்டிய நிலையில், 4 பேர் அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத வைக்கப்பட்டதற்கான புகைப்படங்கள் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி முதல்வர்,வேலை நாள் என்பதுடன், அதிக மாணவர்கள் தேர்வு எழுத வந்ததாலும், தரையில் அமரவைத்து தேர்வு எழுத வைத்தால் பிரச்னையாகும் என்பதாலும் 4 பேர் அமர வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments