மணல் லாரியின் பாரம் தாங்காமல் இடிந்த சிறிய கால்வாய் பாலம்..!

0 3458

தஞ்சாவூர் கீழவாசல் அருகே, கனரக வாகனத்தின் பாரம் தாங்காமல் சிறிய கால்வாய் பாலம் இடிந்ததில் லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.

சிராஜ்நகர் பெரியசாலையில் உள்ள ஆதாம் பாலம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் இரண்டரை லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன் திறக்கப்பட்டது.

இந்நிலையில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு ஆதாம் பாலத்தின் வழியாக லாரி சென்ற போது, பாலத்தின் நடுவில் பள்ளம் ஏற்பட்டு சிக்கியது.

லாரியின் பின் சக்கரங்கள் பள்ளத்தில் சிக்கிய நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

விபத்து குறித்து விளக்கமளித்த மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர், தடை செய்யப்பட்ட பகுதியில், கனரக வாகனம் சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், லாரி உரிமையாளர் பாலத்தை தனது சொந்த செலவில் சீரமைத்து தருவதாக கடிதம் வழங்கியுள்ளதாகவும் விளக்கமளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments