நீட் தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்ப பதிவு..!

0 3981

இளநிலை மருத்துவப் படிப்பில் சேர அடுத்த மாதம் 7ந் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்காக 20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இது முன் எப்போதும் இல்லாத அதிக எண்ணிக்கையாகும். மகாராஷ்ட்ராவில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேரும்,  உத்தரப்பிரதேசத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்ப பதிவுகள்  செய்யப்பட்டுள்ளன.

நீட் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் ஆண்களைவிட 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் அதிகம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments