28 நாட்களில் வீட்டை காலி செய்து முன்பணம் கேட்டதால் ஆத்திரம்... உரிமையாளரின் மகன் தாக்கியதில் வாடகைத்தாரர் உயிரிழப்பு

0 2244
28 நாட்களில் வீட்டை காலி செய்து முன்பணம் கேட்டதால் ஆத்திரம்... உரிமையாளரின் மகன் தாக்கியதில் வாடகைத்தாரர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அருகே வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாடகைக்கு இருந்த 60 வயது முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற அவர், தனது மகளுக்கு மஹேந்திரா சிட்டியில் வேலை கிடைத்ததால் மகளுடன் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றத்தில், ராணி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு வந்துள்ளார்.

அந்த வீட்டில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகள் இல்லாததால் 28 நாட்களில் வீட்டை காலி செய்த சந்திரசேகர், தான் கொடுத்த முன்பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுத்த வீட்டின் உரிமையாளர் ராணியிடம், சந்திரசேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பேச்சு முற்றிய நிலையில், அங்கு வந்த ராணியின் மகன் நரேந்திரன், சந்திரசேகரை கீழே தள்ளி, கையாலும், காலாலும் கடுமையாக தாக்கியதாகவும், இதில் பின் மண்டையில் காயமடைந்து அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மறைமலை நகர் போலீசார், ஒரகடம் பகுதியில் மறைந்திருந்த நரேந்திரனை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments