வானிலிருந்து ஊதுபத்தி ஆலைக்குள் விழுந்த அதிசயம்.. ரூ.10 கோடி பஸ்பம்..! திகில் கிளப்பும் சிசிடிவி காட்சி..!

0 3551

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பலத்த வெடிச்சந்தத்துடன் ஊதிபத்தி ஆலையின் கூரை வெடித்துச் சிதறி 10 கோடி மதிப்பிலான ஊதுபத்தி மூலப்பொருட்கள் கருகி சாம்பலான சம்பவத்தில், வானில் இருந்து எரிகல் விழுந்ததாக தகவல் வெளியான நிலையில், தீவிபத்து நடந்த இடத்தில் தீயில் கருகிய விசித்திரமான பொருட்களை சேகரித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் ஸ்ரீசரவணா அகர்பத்தி என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் பலத்த வெடி சத்தத்துடன் தீ பற்றிய இந்த தொழிற்சாலையில் ஊது பத்தி பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்தது

வாணியம்பாடி, நாற்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை முழுமையாக அணைப்பதற்கு முன்பாக அந்த தொழிற்சாலை முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அங்கு கூறைகள் உடைந்து சிதறிக்கிடந்த நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வெடிச்சத்தம் கேட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்

இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு என்பதால் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வானில் இருந்து ஒளி பொருந்திய பொருள் ஒன்று கூறையை உடைத்துக் கொண்டு உள்ளே விழுவது போலவும் அதற்கு பின்னர் ஊதுபத்தி தொழிற்சாலை தீப்பற்றி எரியும் காட்சிகள் பதிவாகி இருந்தது, வானில் இருந்து விழுந்த எரிகல்லால் இந்த தீவிபத்து நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்து வெள்ளி நிறந்திலான கற்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்

இதற்கு முன்பு வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் வானில் இருந்து எரிகல் விழுந்த நிகழ்வு அரங்கேறி இருப்பதாக தெரிவித்த ஆராய்ச்சியாளர்கள், இந்த தீவிபத்துக்கு எரிகல் காரணமா? என்பதை ஆய்வு முடிவுக்கு பின்னர் தான் தெரிவிக்க இயலும் என்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments