கபடி விளையாடிக் கொண்டிருந்த மாணவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்பு..!

0 1913

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடிக் கொண்டிருந்த 16 வயது மாணவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த அரசு ஐடிஐ மாணவரான பிரதாப், செஞ்சை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கபடிப்போட்டியில் ரெய்டு சென்ற போது எதிரணியினர் மடக்கி பிடித்த போது சற்று நிலை தடுமாறியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து பிரதாப்பிற்கு மயக்கம் ஏற்படவே, உடனடியாக, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments