''சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகியவற்றை ஏற்போர் ஒன்று சேர வேண்டும்'' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 782

சமூக நீதி, சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய 3 கருத்தியல்களை ஏற்கும் ஜனநாயக சக்திகள் இந்தியா முழுவதும் ஒன்று சேர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை நீலாங்கரையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

பின்னர் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியில் பள்ளிவாசல்கள், தர்காக்கள், வக்பு நிறுவனங்களை பழுது பார்க்க ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக்கோரிக்கை தாக்கலின்போது, சென்னை, கோவை மாவட்டங்களில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் தொடங்குவது உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments