நாட்டின் மிக உயரமான 125 அடி உயர அம்பேத்கர் சிலை திறப்பு..!

0 1510

ஐதராபாத்தில் 125 அடி உயரத்திற்கு நிறுவப்பட்டுள்ள நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் திறந்து வைத்தார்.

ஹுசேன் சாகர் ஏரிக்கரையில் 146 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அந்த சிலை, அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திறக்கப்பட்டது.

பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை கட்டமைக்க, 360 டன் ஸ்டீல், 114 டன் வெண்கலம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிலையின் அடி பீடத்தில் மூன்று தளங்கள் உள்ள நிலையில், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் அருங்காட்சியகம், நூலகம் மற்றும் 100 இருக்கைகளுடன் கூடிய ஆடிட்டோரியம் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments