சாலை பள்ளத்தை சீரமைத்த ஹாலிவுட் ஹீரோ அர்னால்டு..!

பிரபல ஹாலிவுட் ஹீரோவாக இருந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கவர்னராகவும் செயல்பட்ட அர்னால்டு தனது வீட்டின் அருகில் சேதமடைந்திருந்த சாலையை தானே சீரமைத்துள்ளார்.
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தனது வீட்டின் அருகில் சாலையில் இருந்த சிறிய பள்ளத்தை சரி செய்வதற்காக தார் கலவை பேக்குடன் களமிறங்கிய அர்னால்ட் பூட்ஸ், பிரத்யேக ஜாக்கெட் மற்றும் சன்கிளாஸ்கள் அணிந்து 50 பவுண்டு எடையுள்ள கலவையை கொட்டி பள்ளத்தை சரி செய்யும் காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகியது.
நான் எப்போதும் சொல்வது இதுதான், குறை சொல்ல வேண்டாம்; அதற்கு ஏதாவது செய்வோம் என்றும் அர்னால்டு ட்விட்டரில் தனது வீடியோவுடன் கருத்தும் பதிவிட்டுள்ளார்.
Comments