சேலத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்.. செய்தி சேகரிக்கச்சென்ற செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல்..!

சேலத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் ரகசியமாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
புதுரோடு நெடுஞ்சாலை அருகில் உள்ள தேநீர் கடையில் மூன்று நம்பர் லாட்டரி விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு சென்று வீடியோ பதிவு செய்த செய்தியாளர்களுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவரும், அவரது மகன் ஞானப்பிரகாசமும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் அளித்த புகாரின்பேரில் தந்தை, மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலசுப்ரமணியன் மீது ஏற்கனவே நம்பர் லாட்டரி விற்பனை தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments