அமெரிக்காவில் காவல்துறை பணியில் டிஜிடாக் ரோபோ பயன்படுத்த சோதனை..!

0 1028

அமெரிக்காவின் நியூயார்க் போலீஸார் காவல்துறை பணியில் டிஜிடாக் என்ற ரோபோவை பயன்படுத்துவதற்கான சோதனையில் ஈடுபட்டனர்.

நகரின் முக்கிய பகுதியில் டிஜிடாக் இயக்கத்தை பரிசோத்த போலீஸார், நெருக்கடி காலங்களில் மனிதர்களுக்கு உதவுதல், சுரங்கப்பாதைகள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தல், மக்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த டிஜிடாக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த 2020ம் ஆண்டிலேயே இந்த ரோபோ பரிசோதிக்கப்பட்ட போதிலும் அப்போது எழுந்த எதிர்ப்பால் டிஜிடாக் ரோபோ காவல்துறையில் இணைக்கப்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments