ஏப்.16 ஆம் தேதி அதிமுக செயற்குழு நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ஏப்ரல் 16ம் தேதி நடைபெற உள்ள அதிமுக செயற்குழு கூட்டத்துக்கு எதிராக எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், இறுதி விசாரணையை வரும் 20ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
வழக்கின் இறுதி விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்படும் வரை, அதிமுகவில் எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments