தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு..!

வெள்ளிக்கிழமை தமிழ்ப் புத்தாண்டும் அதனைத் தொடர்ந்து வரும் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சேலம், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை உள்ளிட்ட போக்குவரத்து கழகங்கள் மூலம் தினந்தோறும் 2 ஆயிரத்து 100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் தமிழ்ப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கூடுதலாக 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments