பிலிப்பைன்ஸில், ஒரே வாரத்தில் கடலில் மூழ்கி 72 பேர் உயிரிழப்பு..!

பிலிப்பைன்ஸில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்ட வாரத்தில், இதுவரை இல்லாத வகையில் 72 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவை முன்னிட்டு 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் முற்றிலுமாகத் தளர்த்தப்பட்டதால் கடற்கரைகளும், ரிசார்ட்டுகளும் நிரம்பி வழிந்தன.
பெற்றோர் துணையின்றி கடலில் தனியாக குளித்த சிறுவர்கள், மதுபோதையில் கடலில் குளித்தவர்கள் என ஒரே வாரத்தில் 72 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments