காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலனால், மாணவி எடுத்த விபரீத முடிவு..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலன், தனது குடும்பத்தாருடன் சேர்ந்துகொண்டு "செத்துப் போ" என்று திட்டி விரட்டியதால் மனமுடைந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாவதி என்ற அந்த மாணவி எழுதி வைத்த கடிதத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவனை காதலித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பமாக இருப்பதை குறிப்பிட்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டபோது அதற்கு மறுப்பு தெரிவித்த ஆனந்தராஜ், அவனது சகோதரர்கள் மற்றும் அண்ணி ஆகியோர் சேர்ந்துகொண்டு "செத்துப்போ" எனக் கூறி பிரபாவதியை விரட்டியடித்துள்ளனர். கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டிருந்த நிலையில், ஆனந்தராஜ் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments