ஓடும் ரயிலில் தீ வைத்த சம்பவம் - கைதான ஷாருக் சைபியிடம் விசாரணை தீவிரம்..!

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவத்தில் கைதான ஷாருக் சைபியின், கடந்த 2 ஆண்டுகால தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக வலைதள சாட்டிங் பட்டியலை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என்றும் இதன் பின்னணியில் தனி நபரோ அல்லது அமைப்புகளோ செயல்பட்டு இருக்கலாம் என மத்திய விசாரணை அமைப்புகள் கூறுவதால், போலீஸ் காவலில் உள்ள ஷாருக்கிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 31ம் தேதி டெல்லியில் இருந்து முதன்முறையாக கேரளாவுக்கு வந்த ஷாருக் சைபி, பாலக்கோடு அருகேயுள்ள ஷொரணூரில் 14 மணி நேரம் இருந்ததும், அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறியதும் தெரியவந்துள்ள நிலையில், அவன் கேரளாவில் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? அவனுடன் யாரேனும் பயணித்தார்களா என விசாரித்து வரும் போலீசார், டெல்லி மற்றும் கேரளாவில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Comments