பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரின் காரில் இருந்து 66 கிலோ வெள்ளி பறிமுதல்..!

கர்நாடகாவில், நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூருக்கு சொந்தமான காரிலிருந்து 66 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து மும்பை நோக்கி சென்ற பி.எம்.டபிள்யூ காரை தாவனகரே அருகே சுங்கச் சாவடியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, உரிய ஆவணங்களின்றி 5 பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களை அவர்கள் கைப்பற் றினர்.
கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிபட்ட பி.எம்.டபிள்யூ கார் போனி கபூரின் பே வியூ தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
Comments