இஸ்ரேல், பாலஸ்தீன ராணுவங்களுக்கு இடையே கடும் சண்டை.. பாலஸ்தீன ஆயுதப்படைகள் மீது குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் விமானங்கள்..!

லெபனான் ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவில் குண்டுமழை பொழியத் தொடங்கியது.
இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன ராணுவங்களுக்கு இடையே கடுமையான சண்டை மூண்டது. ஒரு நாள் முன்பாக ஜெரூசலேமில் மசூதி ஒன்றில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்திய நிலையில் லெபனான் தலைநகரில் இருந்து இயங்கும் பாலஸ்தீன ஆயுதப்படைகள் இஸ்ரேல் மீது சரமாரியாக 34 ராக்கெட் வீச்சு நடத்தின.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் உள்ள பாலஸ்தீன ஆயுதப்படைகள் மீது குண்டுவீசின. நமது எதிரிகள் நம்மை குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு காணொளி உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments