"தீர்மானங்கள் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்றால் ஒப்புதல் அளிக்கலாம்.." - ஆளுநர் ஆர்.என்.ரவி..!

சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அது சட்டமாக முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமை பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் ஆளுநர் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் தீர்மானங்கள் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்றால் ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறினார்.
தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டால், நாகரீகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறுகிறது என்றும் ஆளுநர் கூறினார்.
Comments