கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் பலி..!

கடலூர் மாவட்டம் வாகையூரில், இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞர்கள், முன்னால் சென்ற தனியார் பேருந்தை, திடீரென முந்த முயன்ற போது, எதிரே வந்த கார் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை திருக்கோவிலூரைச் சேர்ந்த அர்னால்ட், தனது நண்பருடன் திட்டகுடியில் இருந்து இராமநத்தம் நோக்கி இருசக்கரவாகனத்தில் சென்றார்.
அதிவேகமாக இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞர்கள், வாகையூர் பெட்ரோல் பங்க் அருகே, முன்னால் சென்ற பேருந்தை, திடீரென முந்த முயன்றனர்.
சாலையில் இடதுபுறத்தில் சென்றவர்கள், திடீரென, பேருந்துக்கு பின்னால் வந்த காரை ஓவர்டேக் செய்ததோடு, திடீரென குறுகிய இடைவெளியில் புகுந்து, வலதுபுறத்தில், பேருந்தை முந்த முயன்றனர். அப்போது, எதிரில் வந்த கார் மீது இளைஞர்கள் சென்ற பைக் பயங்கரமாக மோதியது.
இதில், இருவரும் தூக்கிவீசப்பட்ட நிலையில், பைக்கை ஓட்டிவந்த அர்னால்ட் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments