போக்குவரத்து விதிமீறிய காரை நிறுத்த முயன்ற காவலருக்கு நேர்ந்த விபரீதம்.!

0 5496

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே போக்குவரத்து விதிமீறிய காரை நிறுத்தமுயன்ற போக்குவரத்து காவலரை முட்டித் தள்ளி, கார் பானட்டில் வைத்து 50 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற வாகன ஓட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

சின்ச்வாட்டின் கண்டோபா மால் சௌக் பகுதியில் கிரண் மாணிக்ராவ் என்ற போக்குவரத்து காவலர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, கண்ணாடியில் கருப்பு நிற பிலிம் ஒட்டிவந்த காரை மடக்கி பிடித்து அபராதம் செலுத்துமாறு கூறினார்.

அப்போது, காரில் இருந்த நபர் அபராதம் செலுத்த மறுத்து காரை வேகமாக இயக்கி அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றார். இதனை அறிந்த மாணிக்ராவ் காரின் முன்பக்கத்தில் உள்ள பானட்டில் தாவிப்பிடித்து காரை நிறுத்த முயன்று காய மடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments