மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கணவர் எடுத்த விபரீத முடிவு..!

திருவள்ளூர் மாவட்டத்தில், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்த இளைஞரை, போலீசார் சிறிது நேரம் காக்க வைத்ததால் அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சின்னமாங்கோடு குப்பத்தைச் சேர்ந்த மீனவர் தர்மதுரை என்பவருக்கு சோமஞ்சேரியை சேர்ந்த ரோஜாவுடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான தர்மதுரை மீன்பிடி தொழிலுக்கு சரிவர செல்லாததால், ரோஜா தனது தாய் வீட்டிலேயே 2 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், தன்னை பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்க கோரியும் புகார் அளிப்பதற்காக ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
தர்மதுரை மதுபோதையில் இருந்ததாக கூறி, அவர் சிறிது நேரம் காவல்நிலையத்தில் காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கோபமுற்ற தர்மதுரை காவல்நிலைய அருகிலிருந்த மின்மாற்றியில் ஏறிய போது மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி 40 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments