பாம்பை பிடித்து துன்புறுத்தி கொன்று, அதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்ட 3 பேர் கைது..!

0 1740

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் பாம்பை பிடித்து துன்புறுத்தி கொன்று, அதன் தலையை கடித்து துப்பியதை வீடியோவாக எடுத்து முகநூலில் பதிவிட்ட நபர் உள்ளிட்ட 3 பேரை ஆற்காடு வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

சின்ன கைனூர் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் மோகன் என்பவர், அவரது நண்பர்களான சூர்யா, சந்தோஷம் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட நிலையில், வீடியோ இணையத்தில் பரவியது.

இதுகுறித்து, வனவிலங்குகளுக்கான குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வைல்ட் லைஃப் கிரைம் கண்ட்ரோலை சேர்ந்தவர்கள் ஆற்காடு வனச்சரக ரேஞ்சர் சரவணன்பாபுவிடம் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது வன விலங்குகளை துன்புறுத்துததல் மற்றும் மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments