ஆன்லைன் லாட்டரி சீட்டு குலுக்கலில் அடித்த ஜாக்பாட்.. ஒரே நாளில் கோடீஸ்வரரான பெங்களூர் அதிர்ஷ்டசாலி..!

0 7140

வளைகுடா நாடான அபுதாபியில் நடைபெற்ற ஆன்லைன் லாட்டரி சீட்டு குலுக்கலில் பெங்களூரைச் சேர்ந்தவருக்கு, 44 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததால், ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறினார்.

கர்நாடகாவைச் சேர்ந்த அருண்குமார், ஆன்லைன் மூலமாக வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கான குலுக்கல், கடந்த 3ம் தேதி நடைபெற்றபோது, முதல் பரிசான 20 மில்லியன் திர்காமை வென்றார்.

இதனை அவரிடம் தெரிவிப்பதற்காக செல்போனில் லாட்டரி நிறுவனம் தொடர்பு கொண்ட போது, அருண்குமார் அதனை நம்பாமல், ஆன்லைன் மோசடி எண்ணாக இருக்குமென நினைத்து, அந்த எண்ணை பிளாக் செய்துள்ளார். பின்னர், அவரை வேறொரு எண்ணிலிருந்து தொடர்புக்கொண்டு பரிசு கிடைத்திருப்பது உண்மைதான் என்பதை, நிறுவனம் நம்ப வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments