காங்கோவில் உள்ள பொலோவா கிராமத்தில் நிலச்சரிவு... பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டோர் பலி

காங்கோவில் உள்ள பொலோவா கிராமத்தில் நிலச்சரிவு... பெண்கள், குழந்தைகள் என 20க்கும் மேற்பட்டோர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள பொலோவா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அச்சமயம் அங்கு மலையடிவாரத்தில் உள்ள ஓடையில், துணிகளை சலவை செய்துக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் என 25க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
மண்சரிவுகளில் இருந்து ஏழு பெண்கள் மற்றும் 14 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடருகின்றன.
Comments