சென்னை எல்ஐசி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..!

0 3138

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் பெயர்ப்பலகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் எல்ஐசி கட்டடம், 14 தளங்களை கொண்டதாகும். இந்நிலையில், கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள மின்சார பெயர் பலகையில் ஞாயிறுக்கிழமை மாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், ஸ்கை லிப்ட் இயந்திரத்தின் உதவியுடன் அரை மணி நேரத்திற்குள் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.

மின்சார பெயர்ப்பலகையில் மின்கசிவு ஏற்பட்டதால், தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விஜய் சேகர் தெரிவித்துள்ளார். மேலும், பெயர்ப்பலகையில் மட்டும் தீ விபத்து ஏற்பட்டதால், அலுவலக கட்டிடத்திற்கும், பரமரிப்பு பணியில் இருந்த பணியாளர்களுக்கும் ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments