ஹிஜாப் அணியாத இரு பெண்கள் தலையிலும் தயிர் டப்பாவை கவிழ்த்து அட்டகாசம் செய்தவன் கைது..!

ஈரானில், ஹிஜாப் அணியாத இரு பெண்கள் தலையில் தயிரை ஊற்றி ரகளை செய்தவனை கைது செய்த போலிசார், ஹிஜாப் அணியாததற்காக அந்த இரு பெண்களையும் சேர்த்து கைது செய்தனர்.
மஷத் நகரில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்கு வந்த ஒருவன், வரிசையில் நின்ற இரு பெண்களிடம் ஏன் ஹிஜாப் அணியவில்லை எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.
பின், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தயிர் டப்பாவை எடுத்து இரு பெண்கள் தலையிலும் கவிழ்த்தான்.
கடை உரிமையாளர் ஓடி வந்து அவனை பிடித்து வெளியே தள்ளினார். அவனையும், ஹிஜாப் அணியாத இரு பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
Comments