"புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து அரசு ஆலோசனை" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்!

0 4843

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆரணி மற்றும் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதாக கூறினார்.

இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments