''வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தை சீரமைக்க ரூ.8 கோடி ஒதுக்கீடு..'' - முதலமைச்சர்..!

கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப்பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபடுவோருக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” செப்டம்பர் 17ம் தேதி அரசால் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
பெரியார் கைது செய்யப்பட்டு முதன் முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக்குட்டி கிராமத்தில் புதிதாக பெரியார் நினைவிடம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர்
அறிவிப்பு வெளியிட்டார்.
Comments