''மருத்துவர் பரிந்துரைக்காமல் ஸ்டீராய்டு மருந்துகளை எடுக்கக்கூடாது..'' - மா.சுப்பிரமணியன்..!

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், ஊட்சத்து மருந்து, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாதென, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை நெமிலிச்சேரியில் ஆணழகன் போட்டிக்காக தயாராகி வந்த ஜிம் மாஸ்டர் ஆகாஷ், அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மடிப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான xbb, பிஏ2 வகை கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்தாலும், மக்கள் அச்சப்பட தேவையில்லையெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments