விஏஓ அலுவலகத்திற்குள் லுங்கி கட்டியவருக்கு அனுமதி மறுப்பு.. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்!

0 22606

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் கைலி, அரைக்கால் சட்டை, நைட்டி அணிந்து வருபவர்களுக்கு அனுமதி கிடையாதென அறிவிப்பு வெளியிட்ட விஏஓ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படையின் முன்னாள் வீரரான கரிகாலன், தான் பணியாற்றிய விஏஓ அலுவலகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், லுங்கி கட்டிக்கொண்டு வந்தவரை கிராம நிர்வாக உதவியாளர், அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லையென கூறப்படும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.

இதனடிப்படையில், விஏஓவை பணியிலிருந்து விடுவித்து, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிவேல் நடவடிக்கை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments