அரசு விரைவு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.. அமைச்சர் சிவசங்கர்

0 1524

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அடுத்தடுத்த தொடர் பயணங்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுமென போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்த அமைச்சர் சிவசங்கர்,
சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்துவதாகவும் மத்திய அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபாயுடன், தமிழக அரசும் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கும் என அறிவித்தார்.

மேலும், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 42 சேவைகளை இணையவழியில் பெறுவதற்கு ஆதார் அட்டையை ஆவணமாக பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments