பூமிக்குத் திரும்பும் வழியில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கல கேப்சூல் சேதம்..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமிக்கு வந்த ரஷ்யாவின் சோயுஸ் விண்கல கேப்சூல் சேதமடைந்தது.
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பிரிந்த பின், சோயுஸ் எம்எஸ்-22 என அழைக்கப்படும் இந்த கேப்சூல் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து கஸாக் புல்வெளியில் தரையிறங்கியது. அப்போது காப்சூலின் குளிரூட்டியில் விழுந்த துளை காரணமாக சேதமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறிய விண்கல் கட்டமைப்பைத் தாண்டி வரும் போது குளிரூட்டி சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கேப்சூலின் உள்பகுதியில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததாகவும், பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்றும் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments