''சைபர் குற்றங்களில் மோசடி செய்யப்பட்ட ரூ.235 கோடி மீட்கப்பட்டது..'' - அமித் ஷா..!

சைபர் மோசடி, ஏமாற்றுதல் போன்ற காரணங்களால் 500க்கும் மேற்பட்ட செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். டிஜிட்டல் உலகம் அனைவருக்கும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதில் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள சைபர் கிரைம் மையத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் போது அவர் இதனைத் தெரிவிதத்தார்.
சைபர் கிரிமினல்களால் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரிடம் மோசடி செய்யப்பட்டிருந்த 235 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Comments