அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேர் சரண்..!

சென்னையில் அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேர் செம்பியம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.
பெரம்பூர் தெற்கு அதிமுக பகுதி செயலாளராக இருந்த இளங்கோவன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வியாசர்பாடி பகுதியில் நடக்கும் பிரச்சனைகளில் பஞ்சாயத்தும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அலுவலகத்திலிருந்து வியாசார்பாடி கக்கன்ஜி காலனியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து இளங்கோவனை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், தலை மற்றும் முகத்தில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகள் தேடப்பட்ட நிலையில், இன்று அதிகாலை சரணடைந்த சஞ்சய், கணேசன், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடமிருந்து ஆட்டோ, மற்றும் பட்டா கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோயில் விழாவில் தன்னுடன் தகராறில் ஈடுபட்ட சஞ்சயை, அவரது நண்பர்கள் முன்னிலையில் இளங்கோவன் அடித்ததுடன், தொடர்ந்து தாக்கியும் மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், திட்டமிட்டு தனது நண்பர்களுடன் ஆட்டோவில் பின்தொடர்ந்து இளங்கோவனை கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments