அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தீர்ப்பின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என்றும், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானம், இடைக்கால பொதுச்செயலாளரை நியமித்த தீர்மானங்கள் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம் தரப்பினரின் வாதங்களை ஏற்று தீர்மானங்களுக்கு தடை விதித்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும், ஆனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும் என தனிநீதிபதி தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, அதை ஜூன் 23ஆம் தேதி பிரதான சிவில் வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் எனத் தெரிவித்துள்ள தனிநீதிபதி, சிறப்பு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதித்தால் அது கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும், ஆதலால் தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments