ஓபிசி பிரிவினரை அவமதிப்பதே காங்கிரசின் நோக்கம் - பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல்

0 2426
ஓபிசி பிரிவினரை அவமதிப்பதே காங்கிரசின் நோக்கம் - பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல்

ஓபிசி பிரிவினரை அவமதிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் பியூஸ் கோயல், நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்துக்கு உள்பட்டவர்கள்தான் என்றும், அந்த சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் என தன்னை நினைத்து கொள்ள ராகுலுக்கு உரிமையில்லை என்றும் குறிப்பிட்டார்.

நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பிறகு, ராகுல் காந்தியை போல மேலும் 12 பேரும் தங்களது பதவிகளை இழந்திருப்பதாக கூறிய பியூஸ் கோயல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவரே மன்னிப்பு கேட்கும்படி கூறியும், தனது ஆணவத்தால் அதுபோல ராகுல் செய்யவில்லை என்றும் விமர்சித்தார்.

நாடாளுமன்றத்துக்கு கருப்பு ஆடை அணிந்து காங்கிரசார் வந்ததாக கூறிய அவர், இதன்மூலம் சட்டத்தை காங்கிரசார் அவமதிக்க முயற்சிக்கிறார்களா, ஓபிசி பிரிவினருக்கு எதிரான கருத்தை நியாயப்படுத்துகிறார்களா அல்லது உச்சநீதிமன்றத்துக்கு எதிராக போராடுகிறார்களா எனவும் கேள்வியெழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments