நடுவானில் மோதிக்கொள்ளவிருந்த ஏர் இந்தியா, நேபாள் ஏர்லைன்ஸ் விமானம்.. தானியங்கி எச்சரிக்கை அமைப்பால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து..!

0 1651

ஏர் இந்தியா விமானமும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றும் நடுவானில் மோதிக்கொள்ளவிருந்த நிலையில், தானியங்கி எச்சரிக்கை அமைப்பால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை மலேசியாவிலிருந்து நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைநகர் காத்மாண்டு நோக்கி வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் டெல்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்றும் காத்மாண்டு நோக்கி வந்துள்ளது.

ஏர் இந்தியா விமானம் 19 ஆயிரம் அடி உயரத்திலும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15 ஆயிரம் அடி உயரத்திலும் என அருகருகே வந்ததாகக் கூறப்படுகிறது. 2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின் பார்வையில் விழவே, உடனடியாக நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 7 ஆயிரம் அடி உயரத்துக்கு இறக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அலட்சியமாக செயல்பட்டதாக விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் 3 பேரை நேபாள் சிவில் விமான போக்குவரத்து ஆணையம்  பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments